×

புல்வாமா தாக்குதல்: இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் உதவி!

நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தாக்குதலில் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தாக்குதலில் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதியன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டம் கார்குடியைச்
 

நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தாக்குதலில் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் புல்வாமா தாக்குதலில் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதியன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர்.
உயிர் இழந்தவர்களின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி உதவி மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

முன்னதாக நடிகர் ரோபோ சங்கர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.