×

புத்தாண்டை வரவேற்க லாஸ் வேகாஸுக்கு பறந்த கோலிவுட் லவ் பேர்ட்ஸ்..!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் லாஸ் வேகாஸ் சென்றனர். சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் லாஸ் வேகாஸ் சென்றனர். கோலிவுட்டின் சூப்பர் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டை வரவேற்க தங்களது விருப்பமான லாஸ் வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது. தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக
 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் லாஸ் வேகாஸ் சென்றனர்.

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் லாஸ் வேகாஸ் சென்றனர்.

கோலிவுட்டின் சூப்பர் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டை வரவேற்க தங்களது விருப்பமான லாஸ் வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக வலம் வரும் நயன்தாரா, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தளபதி விஜய்யுடன் ‘தளபதி 63’, சிவகார்த்திகேயன் திரைப்படம், அறிவழகன் படம், ’சைரா நரசிம்மா ரெட்டி’, ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என அரை டஜன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’ போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

கமர்ஷியல், ஹீரோயின் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் வித்தியாசம் காட்டி வரும் நயன்தாரா, தனது காதலருடன் ரொமான்ஸ் செய்ய லாஸ் வேகாஸ் புறப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது பேரழகிக்கு இந்த விடுமுறை கட்டாயம் தேவை என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் இவர்களுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதல் பற்றி வெளிப்படையாக கூறவும் இல்லை, மற்றவர்கள் பேசுவதை கண்டுக் கொள்வதும் இல்லை. தமிழ்-தெலுங்கு என கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்துக் கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அவரது ரசிகரகளிடையே அதிகரித்துள்ளது.