×

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளனர். சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. அறம் படம் தொடங்கி கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்த வெற்றிகளைப் படங்களை கடந்து, தல அஜித்துடன் இணைந்து நடித்த
 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. அறம் படம் தொடங்கி கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்த வெற்றிகளைப் படங்களை கடந்து, தல அஜித்துடன் இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் அகவுள்ளது. 

மேலும், தமிழ்-தெலுங்கு என கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் பொதெல்லாம் தனது காதலர் விக்னேஷ் சிவனை சந்தித்து புகைப்படம் எடுப்பதும், அதனை தவறாமல் பதிவு செய்வதுமென தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு இந்த ஜோடி சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

மேலும், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.