×

பிறந்த நாளில் கேக் வெட்ட மறுத்த நடிகர் ஆரி! காரணம் தெரியுமா?

நடிகர் ஆரி பிறந்த நாளான நேற்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டாமல் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சென்னை: நடிகர் ஆரி பிறந்த நாளான நேற்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டாமல் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் ஆரி சமீப காலமாக தன்னை பொது நல காரியங்களில் ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இவர் தற்போது, காதலின் உயர்வை சொல்லும் ‘அலேகா’ என்ற படத்தில் பிக்
 

நடிகர் ஆரி பிறந்த நாளான நேற்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டாமல் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்

சென்னை: நடிகர் ஆரி பிறந்த நாளான நேற்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டாமல் அனைவருக்கும் இளநீர் கொடுத்து வித்தியாசமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகர் ஆரி சமீப காலமாக தன்னை பொது நல காரியங்களில் ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இவர் தற்போது, காதலின் உயர்வை சொல்லும் ‘அலேகா’ என்ற படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்ற ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோடம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி  படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.