×

பிரஸ்மீட்டில் மகள் காதல் குறித்த கேள்வி…கடுப்பான ‘தர்பார்’ வில்லன்!

அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இருப்பினும் இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்- பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நடிகை அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் சுனில் ஷெட்டி மகள் தான். கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டி இருவரும் காதலிப்பதாக முணுமுணுக்கப்பட்டு வந்தாலும் அதை இருவருமே மறுத்து வருகின்றனர்.
 

அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இருப்பினும்  இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்திய  கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்-  பாலிவுட்  நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நடிகை அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் சுனில் ஷெட்டி  மகள் தான். கே.எல்.ராகுல்-  அதியா ஷெட்டி இருவரும் காதலிப்பதாக முணுமுணுக்கப்பட்டு வந்தாலும் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இருப்பினும்  இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் நடிகர் சுனில் ஷெட்டியிடம் கே.எல்.ராகுல் மகள் அதியா ஷெட்டி காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் உறவில் இல்லை.  நீங்கள் இதை  அதியாவிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் வந்து அது உண்மையா என்று சொல்லுங்கள், பின்னர் நாங்கள் அதைப் பற்றி பேசுகிறோம். உங்களுக்கே தெரியவில்லை, பிறகு என்னிடம் எப்படி கேட்கிறீர்கள்?என்று கடுகடுவென கூறியுள்ளார். 

சுனில் ஷெட்டி தற்போது மலையாளத்தில்  மரைக்காயர் ; அரபிக்கடலிண்டே  சிம்ஹம் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்  பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், சுதீப், பிரபு, அர்ஜுன்,முகேஷ், கீர்த்தி சுரேஷ்,மஞ்சு வாரியர், சித்திக், சுஹாசினி ஆகியோருடன், மோகன்லாலின் மகன் பிரனவும், பிரியதர்சன் மகள் கல்யாணி உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.