×

பிரபல நகைச்சுவை நடிகர் ஆலியின் தாய் காலமானார் !

கடந்த சில மாதங்களாக முகமது செபெடா வயது முதிர்வின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் ஆலியின் தயார் முகமது செபெடா. இவருக்கு வயது 77. நடிகர் ஆலி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், அவரது சகோதரி முகமது செபெடாவை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். ஆனால், அடிக்கடி முகமது செபெடா ஆலியை அவரது வீட்டிற்கு சென்று பார்த்து வருவாராம். இருவரும்
 

கடந்த சில மாதங்களாக முகமது செபெடா வயது முதிர்வின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 

800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்த  பிரபல நகைச்சுவை நடிகர் ஆலியின் தயார் முகமது செபெடா. இவருக்கு வயது 77. நடிகர் ஆலி  ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், அவரது சகோதரி முகமது செபெடாவை பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

ஆனால், அடிக்கடி முகமது செபெடா ஆலியை அவரது வீட்டிற்கு சென்று பார்த்து வருவாராம். இருவரும் ஒன்றாக இருக்கும் போது குடும்பத்தினருடன் அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்களாம். கடந்த சில மாதங்களாக முகமது செபெடா வயது முதிர்வின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். 

இன்று அதிகாலை அவரது உடல்நிலை மோசமாகி ஆந்திரப் பிரதேச மாநிலம், ராஜமன்றி என்னும் இடத்தில் இருக்கும் அவரது வீட்டிலேயே காலமானார். ராஞ்சியில் படப்பிடிப்பிலிருந்த நடிகர் ஆலிக்கு அவரது தாயார் இறந்து விட்டதாகத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைக் கேட்ட  ஆலி அதிர்ச்சியில் ஷூட்டிங்கில் இருந்து புறப்பட்டு அவரது இல்லத்திற்கு வந்துள்ளார்.

நடிகர்  ஆலியின் தாயார் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது தாயாரின் உடல் ராஜமன்றியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.