×

பிரபல தென்னிந்திய இயக்குநருடன் கைக்கோர்க்கும் அக்‌ஷய் குமார்!

நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ள அடுத்தப்படத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அக்ஷய் குமார் கால் பதித்தார். அதன்பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்நிலையில் பிரபல தென்னிந்திய இயக்குநரான ப்ரியதர்ஷனுடன் அக்ஷய் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ஏற்கனவே Hera Pheri, Garam Masala,Bhool Bhulaiyaa மற்றும் De dana dana போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். காமெடி படமாக
 

நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள அடுத்தப்படத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. 

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அக்‌ஷய் குமார் கால் பதித்தார். அதன்பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். 

இந்நிலையில் பிரபல தென்னிந்திய இயக்குநரான ப்ரியதர்ஷனுடன் அக்‌ஷய் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ஏற்கனவே Hera Pheri, Garam Masala,Bhool Bhulaiyaa மற்றும் De dana dana போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர்.  காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என இயக்குநர் ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார். 

அக்‌ஷய் உடன் பணியாற்றும் போது நிறைய கற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் ப்ரியதர்ஷன்,  அக்‌ஷய்க்கான ஜோடி, இன்னும் ஒருவாரத்தில் உறுதிச்செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.