×

பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய்க்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய்க்கு வருகின்ற 9-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. சென்னை: பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய்க்கு வருகின்ற 9-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. ரேடியோ மிர்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆர்ஜே விஜய், சிறந்த பேச்சாளராக வலம் வருகிறார். சின்னதிரை வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரும், ஐடி துறையில் பணியாற்றி வரும் மோனிகாவும் கடந்த 2
 

பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய்க்கு வருகின்ற 9-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. 

சென்னை: பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய்க்கு வருகின்ற 9-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. 

ரேடியோ மிர்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆர்ஜே விஜய், சிறந்த பேச்சாளராக வலம் வருகிறார். சின்னதிரை வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 

இவரும், ஐடி துறையில் பணியாற்றி வரும் மோனிகாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் தற்போது கிரீன் சிக்னல் காட்டியுள்ளனர். 

அதனையடுத்து, இருவருக்கும் பிப்ரவரி 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்ட மோனிகா, காதலன் மிர்ச்சி விஜய்யை கரம் பிடிப்பதில் படு குஷியாக இருக்கிறாராம்.

மேலும், பிப்ரவரி 9-ம் தேதி நடக்கவுள்ள இவர்களின் திருமணத்திற்கு, நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளதாக விஜய் கூறியுள்ளார்.