பிக் பாஸ் வீட்டுக்குள் தத்தி தத்தி அழகாக நடந்து வந்த சாண்டியின் மகள் ‘லாலா’ : கதறி அழுத சாண்டி!
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 82 வது நாளை அடைந்துள்ளது. பிக் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின் அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் நேற்று வனிதாவின் மகள்கள், தர்ஷனின் குடும்பம், சேரனின் அம்மா, தங்கை, மகள் ஆகியோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டுக்குள் சாண்டியின் மகளும் அவரது மனைவியும் வருகின்றனர். ‘ஆரிரோ ஓ ஆரிரோ’ பாடலுக்கு மத்தியில் அழகாகத் தத்தி தத்தி நடந்து சாண்டியிடம் வரும் அவரது மகளை பார்த்துக் கதறி அழுகிறார் சாண்டி. ஆரம்பத்திலிருந்தே ஃப்ரீஸ் டாஸ்க்கிற்கு தயாராக இருந்த சாண்டி ஒருவழியாக அவரது குடும்பத்தைச் சந்தித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.