×

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தானா? 

பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் தமிழ் சீசன் 1, சீசன் 2 என ஒளிபரப்பான இரண்டு நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது அரசியலில்
 

பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.  பிக் பாஸ் தமிழ் சீசன் 1, சீசன் 2 என ஒளிபரப்பான இரண்டு நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில்  இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில், அதில் முதல் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் வர  வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி, ராஜாரங்கூஸ்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சாந்தினி சமீபத்தில் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த பட்டியலில் பிரபல நடிகைகளான சுதா சந்திரன் ,லைலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.