×

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எப்போனு தெரியுமா?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக
 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புரொமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

இந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் மாதம் ஒளிபரப்பாகும் என்ற கூறப்பட்டது. தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் துவங்கவிருப்பதாகப் பேசப்பட்டது வருகிறது. முன்னதாக முதல் சீசன் ஜூன் 25-ம் தேதியும், இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதியும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.