×

பிகில் வரி ஏய்ப்பு…வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான நடிகர் விஜய்யின் ஆடிட்டர்!?

பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரை வீடு, அலுவலகங்கள் மற்றும் விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள்,அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். குறிப்பாக வருமான வரித்துறையினர் மூன்றுநாட்களாக பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரை வீடு, அலுவலகங்கள் மற்றும் விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதில்
 

பைனான்சியர் அன்புச்செழியனின்  சென்னை, மதுரை வீடு, அலுவலகங்கள் மற்றும்  விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு  முன்பு பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள்,அன்புச்செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். குறிப்பாக  வருமான வரித்துறையினர் மூன்றுநாட்களாக பைனான்சியர் அன்புச்செழியனின்  சென்னை, மதுரை வீடு, அலுவலகங்கள் மற்றும்  விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதில்   300 கோடி ரூபாய் பிகில்  வசூலில் 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை  சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டது.  அதேபோல் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஏராளமான சொத்து ஆவணங்கள், பின்தேதியிட்ட காசோலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என மத்திய நேரடிகள் வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர்.  23 மணிநேரம் விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

 இதையடுத்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு  நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் ஆடிட்டர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர்  இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  வருமான  வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களிடம் ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட  கணக்கில் வராத  பணத்தை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.