×

பிகில்: இணையத்தில் வெளியானது விஜயின் மரண மாஸ் பைக் சீன்! 

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில்
 

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய்  அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பிகில் படத்தில் அடிக்கடி ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் விஜய் விலை உயர்ந்த பைக் ஒன்றை ஓட்டிச் செல்கிறார்.அந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் விஜய்யின் புகைப்படத்துடன் மைக்கேல் 05 என்ற எண் பதிக்கப்பட்டுள்ளது. 

கருப்பு நிற உடை, கருப்பு கண்ணாடி என்று அசத்தலாக இருக்கும் விஜயை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மேலும் அந்தக் காட்சியை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.