×

பாலிவுட்டில் ரீமேக்காகிறது அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வளம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுவதும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில் இவர் முன்னதாக இயக்குநர் சிறுத்தை
 

தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வளம் வருபவர் அஜித். ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுவதும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. 

இந்த நிலையில் இவர் முன்னதாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த வேதாளம்  திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தல அஜித் கதாபாத்திரத்தில் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் வெளியான காக்க காக்க படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்  பூஷன் குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தின்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.