×

பாலிவுட் ஹீரோவுடன் இணையும் ஷங்கர்?

‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘2.0’ திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது.அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் கடைசி திரைப்படமான ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்
 

‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘2.0’ திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது.அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் கடைசி திரைப்படமான ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் ஹீரோவை இயக்க ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜான்ரில் சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் இப்படம் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் கூறிய சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதை நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், ஆனால் எந்த ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகே ஷங்கர் தனது அடுத்தப்படத்தில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.