×

பாலிவுட் செல்லும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்! 

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாக ஒரு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும்,
 

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இந்தியில்  ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இந்தியில்  ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படம் வெளியாக ஒரு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், மற்றொரு தரப்பினர் இப்படம்  பற்றி கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். மேலும் பல திரை பிரபலங்கள் கூட படத்தைப் பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இந்த நிலையில் படத்தை பார்த்த பாலிவுட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்திருப்பதாகவும்,இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்திருந்த ஷில்பா கதாபாத்திரம் தான் சவால் நிறைந்த ஒன்று . ஆதலால் அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்க போவது யார்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: சீனாவில் புதிய சாதனை படைத்தது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்