×

பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘திமிரு’ படத்தின் வில்லன் நடிகர்!?

விநாயகன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் அவர் மீதான புகார் குறித்து வாக்குமூலம் பெற்ற போலீசார் அவரை சொந்த பிணையில் விடுவித்தனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழில் விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திமிரு, எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் வில்லன் மற்றும்
 

விநாயகன்  காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம்  சரணடைந்தார்.  இதையடுத்து அவரிடம் அவர் மீதான புகார் குறித்து வாக்குமூலம் பெற்ற போலீசார் அவரை சொந்த பிணையில் விடுவித்தனர். 

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழில் விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திமிரு, எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள்  கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் சமீபத்தில் பாஜக குறித்து சர்ச்சையாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து வலைதளவாசிகளிடம் சிக்கிச் சாதி மற்றும் நிறவெறி தாக்குதலுக்கு ஆளானார். 

இதைத் தொடர்ந்து  நடிகர் விநாயகன் மீது கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி பாலியல் புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விநாயகத்தை அழைக்கச் சென்ற போது, அவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், தன்னை மட்டுமில்லாது தனது அம்மாவையும் அவர் சொல்லும்படி நடந்துகொள்ள வேண்டுமென்று கூறியதாகவும் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்டுள்ள போலீசார், விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து   விநாயகன்  காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம்  சரணடைந்தார்.  இதையடுத்து அவரிடம் அவர் மீதான புகார் குறித்து வாக்குமூலம் பெற்ற போலீசார் அவரை சொந்த பிணையில் விடுவித்தனர். 

இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள  நடிகர் விநாயகன்  மீது கல்பட்டா நீதிமன்றத்தில்  நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விநாயகம் தனது மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் முதல்  கல்பட்டா நீதிமன்றத்தில்  நடைபெறும்.