×

பாத்ரூமில் வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்!

அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் காலமானதையடுத்து அவரது உடல் ஏ.வி.எம் சுடுகாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. உடுமலை பேட்டையைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன். வயது 66. தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆறு படத்தில் வடிவேலு காம்போவில் நடித்துள்ள இவர் நிச்சயம் அனைவருக்கும் பரிட்சியமான முகம் தான். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன்
 

அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது  செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.  

காமெடி  நடிகர் ஜெயச்சந்திரன் காலமானதையடுத்து  அவரது உடல் ஏ.வி.எம் சுடுகாட்டில் இன்று  நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

உடுமலை பேட்டையைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன். வயது 66. தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆறு படத்தில் வடிவேலு காம்போவில் நடித்துள்ள இவர் நிச்சயம் அனைவருக்கும் பரிட்சியமான முகம் தான். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன் தொடர்ந்து படங்களில் நடித்தும் வந்தார். 

இந்நிலையில் படிப்பிப்புக்குச் சென்றிருந்த அவர் வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை  பாத்ரூமுக்கு சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது  செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.  

இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  நடிகர் சங்கம் சார்பாக  நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஏ.வி.எம் சுடுகாட்டில் இன்று ஜெயச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த  ஜெயச்சந்திரனுக்கு லக்ஷ்மி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.