×

‘பாட்ஷா படத்துடன் வாழை இலையில் விருந்து’ ஜப்பானில் களைகட்டும் ரஜினி பிறந்தநாளின் வைரல் வீடியோ!

ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பி வருகின்றனர். தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எளிமை, பண்பு, அடக்கம், அமைதி என மொத்த உயர்குணத்தையும் தனக்குள் வைத்துள்ள ஒரு மாபெரும் அத்தியாயம் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பி வருகின்றனர்.
 

ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம் பாட்டம்  என பட்டையை  கிளப்பி வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எளிமை, பண்பு, அடக்கம், அமைதி என மொத்த உயர்குணத்தையும் தனக்குள் வைத்துள்ள ஒரு மாபெரும் அத்தியாயம் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

இதனால்  ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம் பாட்டம்  என பட்டையை  கிளப்பி வருகின்றனர். 

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இலவசமாக உணவுகள் வழங்கியும், சூப்பர் ஸ்டார் படங்களை திரையிட்டும் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்.

தலைவர் பெஸ்டிவல் என்ற பெயரில் களைக்கட்டிய இந்த கொண்டாட்டத்தில் பாட்ஷா படத்தில்  ரஜினியின் ஆட்டோ டிரைவர்  கெட்டப்பிலும்  ரசிகர்கள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.