×

பாட்டில் கேப் சேலஞ்சில் அசத்திய பிரபல நடிகை!

உடலை பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை ஸ்வேதா மேனன் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வலைதளங்களில் கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட், கிகி சேலஞ்ச் போன்றவை வைரலானது. தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் எனும் பாட்டில் மூடியை காலால் உதைத்துத் திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.அதாவது பாட்டிலின் மூடியை காலால் உதைத்து கழற்ற வேண்டும். ஆனால் பாட்டிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது
 

உடலை பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகை ஸ்வேதா மேனன் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

வலைதளங்களில்  கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட், கிகி சேலஞ்ச் போன்றவை வைரலானது. தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் எனும் பாட்டில் மூடியை காலால் உதைத்துத் திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.அதாவது பாட்டிலின் மூடியை காலால் உதைத்து கழற்ற வேண்டும். ஆனால் பாட்டிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது என்பது தான் முக்கியமான கண்டிஷன். 

இதை முதலில் யுஎஃஏ குத்துச்சண்டை சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அவரை தொடர்ந்து பாடகர் ஜான் மேயரும் இதனை முயற்சி செய்து வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்தார். இதனால் இந்த சேலஞ்ச்சை  பலரும் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழில், சாதுமிரண்டா, நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உட்பட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா மேனன். இவர் தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில்  பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இந்த சவாலில் ஈடுபட்டு உடலை பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.