×

பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக இருக்கிறது: மருத்துவமனை அறிக்கை!

பாடகர் எஸ்.பிபியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களை தனது பாட்டு வசத்தால் கவர்ந்திழுத்தவர் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். சுமார் 40,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரலுக்கு மயங்காதோர் யாருமிலர். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப கட்டத்தில் இவரது உடல்நிலை சீராக இருந்தாலும், நாட்கள் போக போக எஸ்பிபி உடல்நிலை மோசமானது. சில நாட்களுக்கு
 

பாடகர் எஸ்.பிபியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களை தனது பாட்டு வசத்தால் கவர்ந்திழுத்தவர் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். சுமார் 40,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரலுக்கு மயங்காதோர் யாருமிலர். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப கட்டத்தில் இவரது உடல்நிலை சீராக இருந்தாலும், நாட்கள் போக போக எஸ்பிபி உடல்நிலை மோசமானது. சில நாட்களுக்கு முன்னர், எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமானதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அவர் மீண்டு வர வேண்டும் என கோடான கோடி மக்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கடந்த 20 ஆம் தேதி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். நிச்சயமாக இசை அவரை மீட்டுக் கொண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மக்களின் பிரார்த்தனைக்கு இணங்க தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது.

இந்த நிலையில் எஸ்பிபியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிசியோதெரபி சிகிச்சைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் ஐசியூவில் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.