×

பாஜகவில் இணைந்த பிரபல பாடகரின் மகள்!

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு தாங்கள் பாஜகவில் இணைந்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பாஜகவில் இணைந்துள்ளார். மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன். தமிழில் சுமார் 8 ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ள இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். இவரது மகள் பிரஷாந்தி தற்போது தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக வலம்வருகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த
 

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு தாங்கள்  பாஜகவில் இணைந்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி  பாஜகவில் இணைந்துள்ளார். 

மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன். தமிழில் சுமார் 8 ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ள இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். இவரது மகள் பிரஷாந்தி  தற்போது தமிழ்  சினிமாவின் பின்னணி பாடகியாக வலம்வருகிறார். 

இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிரஷாந்தினியும், அவரது கணவர் பிரேம்நாத்தும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு தாங்கள்  பாஜகவில் இணைந்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்களை வாழ்த்திய பொன்.ராதாகிருஷ்ணன் மோடியின் நல்ல திட்டங்களைக்  குறித்து மக்கள் மத்தியில் முடிந்தவரை எடுத்து கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

சமீபகாலமாக நடிகர் நடிகர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது பாடகர்களின் கவனமும் பாஜக பக்கம் திரும்பியுள்ளது.