×

பாங்காக்கில் வெயிட்டை குறைக்கும் சிம்பு..!

நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சென்னை: நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து
 

நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சென்னை: நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக தனது ஃபிட்னஸில் நடிகர் சிம்பு கவனம் செலுத்தி வருகிறாராம்.

‘மாநாடு’ திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து பழைய கியூட் சிம்பு தோற்றத்திற்கு மாற பாங்காக்கில், தீவிர பயிற்சிகளை சிம்பு மேற்கொண்டு வருகிறாராம். சிம்பு பிறந்தநாளையொட்டி ‘மாநாடு’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகி மற்றும் இதர கதாபாத்திரம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.