பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் தபாங் 3:
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடித்து ,பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போடும் தபாங் -3 இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்புகிறது , ரூ .81.15 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது
தபாங் 3 இந்த வார இறுதியில் அதன் பாக்ஸ் ஆபிஸின் வசூலை உயர்த்தி, 30 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
சல்மான் கான் நடித்த தபாங் 3 டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகி அன்று மட்டும் 24.5 கோடி ரூபாய் வசூல் செய்தது . இந்த படம் இந்த வார இறுதியில் அதன் வசூலை அதிகரித்து ,வசூலில் 30 சதவிகித வளர்ச்சியைப் கண்டுள்ளது .வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் ட்விட்டரில் படம் வெளியான மூன்றாம் நாளில் படத்தின் வசூலைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் எழுதினார், “# தபாங் 3 – அதன் வசூலில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பில் – அதன் முதல் வார இறுதியில் 80 கோடியை வசூல் செய்தது, சூப்பர் ஸ்டார் சல்மன்கானின் நடிப்பு காரணமாக … வெள்ளியன்று 24.50 கோடி, சனி 24.75 கோடி, ஞாயிறு 31.90 கோடி என மொத்தம்: . 81.15 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ..
பொதுவாக ஒரு படம் முதல் வாரத்தில் 73 கோடி வசூலிக்கும் என்றும் ,இது சூப்பர் ஸ்டார் சல்மான்கான் படமென்பதால் 81கோடிக்குமேல் வசூலித்து சாதனை புரிகிறது ,இன்னும் மேன்மேலும் சாதனை புரியுமென box office india கூறுகிறது .இது சல்மான்கான் ஸ்டார் பவரை காமிக்கிறதென்றும் அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்றும் படம் பார்த்த பலர் கூறுகின்றனர் .