×

பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்!

பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று உடல் நிலை கோளாறு காரணமாக காலமானார். சென்னை: பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று உடல் நிலை கோளாறு காரணமாக காலமானார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் காதலன், ஹேராம், ரட்சகன், செல்லமே, காதல் மன்னன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் மத்திய அரசின்,
 

பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று உடல் நிலை கோளாறு காரணமாக காலமானார்.

சென்னை: பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று உடல் நிலை கோளாறு காரணமாக காலமானார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் காதலன், ஹேராம், ரட்சகன், செல்லமே, காதல் மன்னன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். 

இவர் மத்திய அரசின், பத்ம பூஷண், ஞானபீட விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  10-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார். சங்கீத நாடக அகாடமி, 10 தேசிய விருது, 7 ஃபிலிம் ஃபேர் விருது என திரைத்துறையில் தனது நடிப்புக்கும், இயக்கத்துக்கும் பல விருதுகளைக் வாங்கி குவித்துள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தற்போது 81வது ஆகும் இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு செய்தியை அறிந்து திரையுலக பிரபலங்களும், எழுத்தாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.