×

பள்ளிக்கூடத்தில் அரசியல் பேசும் ஜோதிகா! வெளியானது ராட்சசி பட ட்ரைலர்

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் நடிகை ஜோதிகா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார். அதையடுத்து இவர் கைவசம் 4 படங்கள் மேல் உள்ளது. இதற்கிடையில் இவர் தற்போது புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ்
 

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் நடிகை ஜோதிகா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார். அதையடுத்து இவர் கைவசம் 4 படங்கள் மேல் உள்ளது. 

இதற்கிடையில் இவர் தற்போது புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்  போஸ்டர் இன்று காலை வெளியானது. அதில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவும் என்று அறிவிக்கப்பட்டது இருந்தது. அதன்படி படத்தின் ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது. அதில் பள்ளி ஆசிரியராக நடிக்கும் ஜோ, யாருக்கும் அஞ்சாமல் தப்பை தட்டி கேட்பது போல் உள்ளது. காட்டன் சாரி, காலர் வைத்த ஃப்ளவுஸ், நேர்கொண்ட நிமிர்ந்த நடை என்று நடிப்பில் அசதியுள்ள ஜோதிகாவுக்கு இந்த படம் கம் பேக் படமாக அமையும் என்றே கருதப்படுகிறது.