×

பட்டாஸ் படம் எப்படி இருக்கும்? இயக்குநர் துரை செந்தில் குமார் தகவல் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தனுஷின் பிறந்தநாளை
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். 

புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாஸ் என்று பெயரிட்டுள்ள படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் துரை செந்தில் குமார் பேட்டியளித்துள்ளார். அதில், ‘தனுஷ் இந்த படத்தில் மகன், அப்பா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மகன் தனுஷின் பெயர் தான் பட்டாஸ். அதுவும் அந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் 15 முதல் 20 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க களரிக்கு முன்பு சோழர் காலத்திலிருந்த ஒரு தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும்’ கூறியுள்ளார்.