×

படமாகிறது நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். சென்னை: இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இயக்குனர் நடிகர் பார்த்திபன் தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்திற்குப்பிறகு அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு பல்வேறு கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார். ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமையாமல் எல்லாம் கிடப்பில் இருக்கின்றன. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெர்றது. இந்தப்படத்திற்கு
 

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை: இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் நடிகர் பார்த்திபன் தனதுகதை திரைக்கதை வசனம் இயக்கம்படத்திற்குப்பிறகு அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு பல்வேறு கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார். ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமையாமல் எல்லாம் கிடப்பில் இருக்கின்றன
கதை திரைக்கதை வசனம் இயக்கம்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெர்றது. இந்தப்படத்திற்கு கிடைத்த ஆதராவை கேள்விபட்டு இளையராஜா படம் பார்க்க விரும்பி., பார்த்திபன் போட்டுக்காட்டினார். அதே வேகத்தில் பார்த்திபன் இன்னொரு ஸ்கிரிப்படை தயார் செய்தார்.

நகைச்சுவையில் பார்த்திபன், வடிவேலு காமெடிக்கு எப்போதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அதுவும் பெரிய ஹிட் ஆன காமெடியாக இன்றுவரை தொலைக்காட்சிகளில் ரசிக்கப்படுகின்றன. அதனால் பார்த்திபன் தனக்கும் வடிவேலுவிற்கும் ஒரு நகைச்சுவை கதையை தயார் செய்து வைத்தார்.

இக்கதையை வடிவேலுவிடம் சொல்ல பார்த்திபன் முயன்றபோது, வடிவேலு பிடி கொடுக்கவில்லை, கதையையும் கேட்கவில்லை. இது பார்த்திபனுக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து அவர் இன்னொரு கதையை தயார் செய்து முடித்திருக்கிறார்

சமீபகாலமாக பார்த்திபன் இணையத்தில் அதிகமாக பார்ப்பது மறைந்த நடிகர் சந்திரபாபுவின் செய்திகளைதான். அவரது போட்டோக்கள், படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் என்று நிறைய பார்த்து வந்தவருக்கு, தொடர்ந்து சந்திரபாபுவின் மீது ஈடுபாடு அதிகமானது. அதனால் அவரது உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பழம்பெரும் நடிகர்கள், நடிகைகள் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.

சந்திரபாபு கடைசி கட்டத்தில் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவி  செய்தவர்களில் முக்கியமானவர்கள் தேங்காய் சீனிவாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்தான். இதைக்கேள்விபட்டு அவர்களிடமும் பேசிபார்த்து தகவல்களை திரட்டி வைத்திருக்கிறார் பார்த்திபன்.

இந்த தகவல்களை வைத்து சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் பார்த்திபனுக்கு வந்திருக்கிறது. இதற்கான முதல் கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார். தனது உதவியாளர்கள் மூலம் மேலும் தகவல்களை திரட்டி வருகிறார். விரைவில் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் அறிவிப்பை பார்த்திபன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.