×

படத்தில் வில்லனா இருந்தாலும் நிஜத்தில் ரியல் ஹீரோவான நடிகர்!

நடிகர் சுமன் ராணுவ வீரர்களுக்காக 175 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். சென்னை: நடிகர் சுமன் ராணுவ வீரர்களுக்காக 175 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். நடிகர் சுமன் 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து பிரபலம் அடைந்தவர். தற்போது குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ‘நமது நாட்டின் உண்மையான வாட்ச்மேன் என்றல் அது ராணுவ வீர்கள் தான்.
 

நடிகர் சுமன் ராணுவ வீரர்களுக்காக 175 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். 

சென்னை: நடிகர் சுமன் ராணுவ வீரர்களுக்காக 175 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். 

நடிகர் சுமன் 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து பிரபலம் அடைந்தவர். தற்போது குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ‘நமது நாட்டின் உண்மையான வாட்ச்மேன் என்றல் அது ராணுவ வீர்கள் தான். நாம் நிம்மதியாக வாழ்வதற்கு அவர்கள் உறையும் பணியில் காவல் புரிகிறார்கள். அவர்கள் மத்தியில் சாதி மத பாகுபாடுகள் இல்லை. ஒற்றுமையாக எல்லையில் காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  

ஆனால் நாம் தான் ஜாதி, மதம் என்று கலவரம் செய்து கொண்டு இருக்கிறோம். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்துள்ளேன்.ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் எனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 175 ஏக்கர் நிலத்தையும் ராணுவ வீரர்கள் நலனுக்காக அவர்கள் குடும்பத்துக்கு தானமாக வழங்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.