×

நேர்கொண்ட பார்வை’ ஓடாவிட்டாலும் பரவாயில்லை என்று அஜீத் சொன்னார்’… ஹெச்.வினோத் விபரீத தகவல்…

‘பிங்க்’ படம் எவ்வளவு சீரியஸான அதை உங்கள் ரசிகர் புரிந்துகொள்வார்களா என்கிற பயம் இருக்கிறது சார் என்று அஜீத் சாரிடம் சொன்னபோது ‘இந்த ஒரு படம் ஓடாவிட்டால் என் மார்க்கெட்டை அது பாதிக்காது. ஆனால் ஒரு நல்ல படத்தில் நடித்தேன் என்கிற பெருமையே எனக்குப் போதும்’ என்று அஜீத் சொன்னதாக வட இந்திய இணையதளம் ஒன்றுக்கு அதிர்ச்சிப் பேட்டி அளித்திருக்கிறார் நேர்கொண்ட பார்வை கொண்ட இயக்குநர் ஹெச்.வினோத் ‘பிங்க்’ படம் எவ்வளவு சீரியஸான அதை உங்கள் ரசிகர்
 

‘பிங்க்’ படம் எவ்வளவு சீரியஸான அதை உங்கள் ரசிகர் புரிந்துகொள்வார்களா என்கிற பயம் இருக்கிறது  சார் என்று அஜீத் சாரிடம் சொன்னபோது ‘இந்த ஒரு படம் ஓடாவிட்டால் என் மார்க்கெட்டை அது பாதிக்காது. ஆனால் ஒரு நல்ல படத்தில் நடித்தேன் என்கிற பெருமையே எனக்குப் போதும்’ என்று அஜீத் சொன்னதாக வட இந்திய இணையதளம் ஒன்றுக்கு அதிர்ச்சிப் பேட்டி அளித்திருக்கிறார் நேர்கொண்ட பார்வை கொண்ட இயக்குநர் ஹெச்.வினோத்

‘பிங்க்’ படம் எவ்வளவு சீரியஸான அதை உங்கள் ரசிகர் புரிந்துகொள்வார்களா என்கிற பயம் இருக்கிறது  சார் என்று அஜீத் சாரிடம் சொன்னபோது ‘இந்த ஒரு படம் ஓடாவிட்டால் என் மார்க்கெட்டை அது பாதிக்காது. ஆனால் ஒரு நல்ல படத்தில் நடித்தேன் என்கிற பெருமையே எனக்குப் போதும்’ என்று அஜீத் சொன்னதாக வட இந்திய இணையதளம் ஒன்றுக்கு அதிர்ச்சிப் பேட்டி அளித்திருக்கிறார் நேர்கொண்ட பார்வை கொண்ட இயக்குநர் ஹெச்.வினோத்.

‘நேர்கொண்ட பார்வை’படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து படம் இப்போது பின்னணி இசைச் சேர்ப்புக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் ஸ்டுடியோவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அஜீத்தின் அனுமதியோடு சில பேட்டிகளில் மனம் திறக்க ஆரம்பித்துள்ளார் இயக்குநர் வினோத். துவக்கத்தில் நேர்கொண்ட பார்வை குறித்த தனது பார்வையைச் சொல்லி, இது மிகவும் சீரியஸான கருத்துச் சொல்கிற படம். உங்கள் ரசிகர் ஏற்பார்களா? ஏனெனில் இப்படத்தில் வழக்கமான ஹீரோயிஸம், குடும்ப செண்டிமெண்டுகள் மற்றும் பாசக் காட்சிகள், குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் இல்லவே இல்லையே என்று அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், ‘இந்த ஒரு படம் பத்தி எனக்கு ஓடணும்ங்குற பயம் இல்லை. நல்ல படம் எடுப்போம் வாங்க’ என்று என்னை சர்வசாதாரணமாக கன்வின்ஸ் செய்தார். இப்படத்தில் அவருடைய உச்சக்கட்ட ஈடுபாட்டிற்கு இன்னொரு உதாரணம், அவர் நடித்த ஒரு காட்சிக்குக் கூட நான் ஒன்மோர் கேட்கவில்லை. அவருக்கு திருப்தி வரும்வரை அவரே அடுத்தடுத்த டேக்குகளைக் கேட்டு வாங்கி நடித்தார்’ என்று இன்னொரு ஆச்சரியத்தையும் கொட்டுகிறார் வினோத்.