×

நீங்க எத வேணும்னாலும் போடுங்க! ஆனா என் பெயரை சேர்க்காதீங்க! ராஜ்கிரண் காட்டம்

ராஜ்கிரண் பேஸ்புக்கில் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாங்கள் விரும்பும் விசயத்தை மற்றவரின் விருப்பம் தெரியாமல் அவர் பெயருடன் tag செய்வது விரும்பத்தகாத விசயம்… ஒத்த கருத்து உள்ளவர்களாயினும் கூட, வார்த்தைப்பிரயோகங்களிலும், அணுகுமுறையிலும், உள்வாங்குதலிலும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கும் தமிழில் பழம்பெரும் நடிகராகத் திகழ்கிறார் ராஜ்கிரண். இவர் பல படங்கள் நடிக்கவும், இயக்கமும் செய்துள்ளார். ‘பவர் பாண்டி’ படத்தில் இவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. தற்போது ‘ஷைலாக்’ என்ற படத்தின் மூலம் மலையாள
 

ராஜ்கிரண் பேஸ்புக்கில் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாங்கள் விரும்பும் விசயத்தை மற்றவரின் விருப்பம் தெரியாமல் அவர் பெயருடன் tag செய்வது விரும்பத்தகாத விசயம்… ஒத்த கருத்து உள்ளவர்களாயினும் கூட, வார்த்தைப்பிரயோகங்களிலும், அணுகுமுறையிலும், உள்வாங்குதலிலும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கும்

 

தமிழில் பழம்பெரும் நடிகராகத் திகழ்கிறார் ராஜ்கிரண். இவர் பல படங்கள் நடிக்கவும், இயக்கமும் செய்துள்ளார். ‘பவர் பாண்டி’ படத்தில் இவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. தற்போது ‘ஷைலாக்’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைகிறார்.

ராஜ்கிரண் பேஸ்புக்கில் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாங்கள் விரும்பும் விசயத்தை மற்றவரின் விருப்பம் தெரியாமல் அவர் பெயருடன் tag செய்வது விரும்பத்தகாத விசயம்… ஒத்த கருத்து உள்ளவர்களாயினும் கூட, வார்த்தைப்பிரயோகங்களிலும், அணுகுமுறையிலும், உள்வாங்குதலிலும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கும்… என் கருத்துக்கு ஒவ்வாத விசயத்தைக்கூட என் பெயருடன் tag செய்கிறார்கள். தயவுசெய்து யாரும் என் பெயரில் எதையும் tag செய்ய வேண்டாம்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு பதிலளித்த ஒரு பயனருக்கு ராஜ்கிரண் கூறியிருப்பது “பலர்  அவர்களின் பதிவில், என்னோடு tag செய்திருப்பதாகத்தானே பார்ப்பவர்களுக்கு தோன்றும்… இந்தக்கருத்தில் ராஜ்கிரணுக்கும் உடன்பாடு இருக்கிறது என்று நினைத்து, அவர்கள் அதை பகிர்ந்தால், அது தவறான வழிநடத்துதல் ஆகுமே ? அதனால் தான் தம்பி, பல முறை இதை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன்” என்று  கமெண்ட் செய்திருந்தார்.

 

allowfullscreen