×

நிறைவேறாத இர்பான் கானின் கடைசி ஆசை!

பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 54 ஆகும். பெருங்குடல் தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டில் அவருக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு பல மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். இவர் நடிப்பில் ஹோமி அடஜானியாவின் ஆங்ரேஸி மீடியம் அவரது கடைசி படமாக வெளியானது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான்
 

பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 54 ஆகும். பெருங்குடல் தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டில் அவருக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டு பல மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். இவர் நடிப்பில் ஹோமி அடஜானியாவின் ஆங்ரேஸி மீடியம் அவரது கடைசி படமாக வெளியானது. 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமான நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரது இறுதிச்சடங்கில் கூட இர்பான்கானால் கலந்து கொள்ள முடியவில்லை. இர்பான் ஊரடங்கால் முன்பையில் மாட்டிக்கொண்டதால் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை அவர் கண்ணீருடன் பார்த்தார். இந்த நிலையில் தாய் இறந்த மூன்றே நாட்களில் இர்பான்கான் மறைந்தது அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் தன் கடைசி ஆசையான தன் அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் போனது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.