×

நான் முதலியார், என் சாதியை சேர்ந்தவர்கள் எனக்கு ஓட்டு போடுங்க: நடிகர் ஆனந்தராஜ் சர்ச்சை பேச்சு!

என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் சர்ச்சையாகப் பேசியுள்ளார். சென்னை: என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் சர்ச்சையாகப் பேசியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் உறுதியான ஆதரவாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த ராஜ். ஜெயலலிதா மீது கொண்ட அன்பால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் திவீர விசுவாசியாக இருந்து அதிமுகவுக்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் ஜெயலலிதா
 

என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

சென்னை: என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் உறுதியான ஆதரவாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த ராஜ். ஜெயலலிதா மீது கொண்ட அன்பால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் திவீர விசுவாசியாக இருந்து அதிமுகவுக்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால்  ஜெயலலிதாவின் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மனமுடைந்து அதிமுகவிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். மேலும் ஆளும் அதிமுகவைக் கடுமையாகச் சாடி வந்தார். 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தன் நிலைப்பாடு குறித்துத் தெரிவிக்கச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழக பிரச்னைகளை தீர்ப்பதற்குத் தமிழக கட்சிகளுக்கு எந்த உறுதியும் தேசிய கட்சிகள் அளிக்கவில்லை.  அதனால் நான் நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்கத் தமிழகம் முழுவதும் செல்ல உள்ளேன். நான் நோட்டா வேட்பாளர். நோட்டாவுக்கு வாக்களிப்பதன் எந்த பலனும் இல்லைதான். ஆனால்  ஏன்  இத்தனை  வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும். அதற்காக தான் இதை செய்யவுள்ளேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சரத்குமார் உள்ளிட்ட பலரும் சாதியை பலமாக வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். அப்படி பார்த்தால் நான் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அதனால் என் சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் எனக்கு வாக்களியுங்கள். இங்கு யாரும் சாதி பார்க்காமல்  அரசியல் செய்யவில்லை. அதனால் நானும் அடையப்படுத்துகிறேன்’ என்று கூறி சலசலப்பை உண்டாக்கினார்.

இதை வாசிக்க: சென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்: சேவாக்