×

நான் அணியும் உடை பற்றி கமெண்ட் செய்ய நீங்கள் யார்?: நெட்டிசன்களை விளாசிய ஸ்ரீ தேவி மகள்!

நடிகை ஜான்வி கபூரின் தன் உடையை பற்றி கமெண்ட் செய்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னை: நடிகை ஜான்வி கபூரின் தன் உடையை பற்றி கமெண்ட் செய்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. தற்போது அவர் விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார். கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். சமீபகாலமாக ஜான்விகபூர் மிகவும் கவர்ச்சியான
 

நடிகை ஜான்வி கபூரின் தன் உடையை பற்றி கமெண்ட் செய்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.   

சென்னை: நடிகை ஜான்வி கபூரின் தன் உடையை பற்றி கமெண்ட் செய்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.   

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. தற்போது அவர் விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து வருகிறார். கரண் ஜோகர் இயக்கும் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். சமீபகாலமாக ஜான்விகபூர் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வருவதாகப் பரவலாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் மெல்லிய வெள்ளை உடையும் கீழே ஒரு உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் குறித்து பலரும் கடுமையாக விமர்சனம் செய்ய வருகின்றனர். இதனால் கடுப்பான ஜான்வி, ‘நான் அணியும் உடை குறித்து கருத்து கூற நீங்கள் யார்? உடை என் சுதந்திரம். என் நடிப்பில் குறை இருந்தாலும் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன், உடை என் சொந்த விஷயம், இதுகுறித்து கமெண்ட் அளிப்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை என்று கூறியுள்ளார். 

முன்னதாக கத்ரீனா கைஃப், ஜான்வி கபூர் அணிந்து வரும் ஜிம் உடைகளைப் பற்றி விமர்சனம் செய்திருந்தது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியது குறிப்பிடத்தக்கது.