×

நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலத்தில் மகனுடன் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான்

தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுச் சிறப்புத் தொழுகை நடத்தினார். நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுச் சிறப்புத் தொழுகை நடத்தினார். 463-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலமும், நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மகனுடன்
 

தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுச் சிறப்புத் தொழுகை நடத்தினார்.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  பங்கேற்றுச் சிறப்புத் தொழுகை நடத்தினார்.

463-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று இரவு சந்தனக்கூடு ஊர்வலமும்,  நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   தன் மகனுடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வருகை புரிந்ததால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,