×

நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்து கூறிய காதலர் விக்னேஷ் சிவன்!

இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார். பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாளான நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார். அதில், ‘எல்லா நாட்களும் உங்கள் தினம் தான். உங்களைச் சுற்றியுள்ள பெண்களை
 

இயக்குநருமான  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார்.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாளான நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார்.

அதில், ‘எல்லா நாட்களும் உங்கள் தினம் தான். உங்களைச் சுற்றியுள்ள பெண்களை நேசிப்பதைத் தொடருங்கள், போற்றிக் கொள்ளுங்கள்! மிகுந்த அக்கறையையும்,  மரியாதையையும் அவர் மீது பொழியுங்கள்.

அவள் எப்போதும் மிகுந்த கண்ணியத்துடனும் அன்புடனும் பார்க்கப்படுகிறாள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் சுதந்திரமாகவும் இருக்கட்டும் !! இனிய பெண்கள் தின வாழ்த்துகள். பெண்கள் இல்லாமல்  இந்த உலகில் எங்களுக்கு ஒன்றும் இல்லை !!! ஆண்கள் இல்லாமல் அவர்கள் எதையும் & எல்லாவற்றையும் சாதிக்க முடியும்! ‘ என்று பதிவிட்டுள்ளார்.