×

நயன்தாராவின் திருமணம் எப்போ தெரியுமா? உலகக்கோப்பையைக் கணித்த ஜோதிடர் கருத்து!

சென்னை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போதும் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாகத் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலித்து வருகின்றனர். மேலும் தமிழ்-தெலுங்கு என்று கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களைக் கழிப்பது மட்டுமின்றி அங்கு எடுத்துக்கொள்ளும்
 

சென்னை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போதும் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாகத் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலித்து வருகின்றனர். 

மேலும் தமிழ்-தெலுங்கு என்று கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன்  வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களைக் கழிப்பது மட்டுமின்றி அங்கு எடுத்துக்கொள்ளும்  புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்வது என்று தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தேதியை அறிவிக்கும் படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது நயந்தவராவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம்… ஜோதிடர் ஒருவர் நயன்தாராவின் திருமணம் எப்போது என்பதை கணித்துள்ளார். அதன்படி அவரது திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அவர் கணித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில்,விரைவில் அவரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜோதிடரின் இந்த கணிப்பும் சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக இதே ஜோதிடர் தான் சம்பத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்றும், நியூசிலாந்து, இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதும் என்றும் கணித்து கூறியிருந்தார்.