×

நயன்தாரா இவ்வளவு மோசமா? கொந்தளிக்கும் கோடம்பாக்கம்!

நம்ம இளைய தளபதி நடிச்ச ‘கத்தி’ திரைப்படம் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு இல்ல. அப்படியே அந்த ‘கத்தி’ படத்தின் ரிலீஸில் கதைத் திருட்டு பஞ்சாயத்து வந்தது ஞாபகம் இருக்கா? முதன் முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையைத் திருடிட்டார் என்று வழக்குத் தொடர்ந்த பெருமை ‘அறம்’ படத்தோட இயக்குநர் கோபிக்கு தான் உண்டு. அந்த கதைத் திருட்டு வழக்கில் சில பல லட்சங்கள் கைமாறி கட்டக்கடைசியில் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது என்று அப்போது பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். நம்ம
 

நம்ம இளைய தளபதி நடிச்ச ‘கத்தி’ திரைப்படம் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு இல்ல. அப்படியே அந்த ‘கத்தி’ படத்தின் ரிலீஸில் கதைத் திருட்டு பஞ்சாயத்து வந்தது ஞாபகம் இருக்கா? முதன் முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையைத் திருடிட்டார் என்று வழக்குத் தொடர்ந்த பெருமை ‘அறம்’ படத்தோட இயக்குநர் கோபிக்கு தான் உண்டு. அந்த கதைத் திருட்டு வழக்கில் சில பல லட்சங்கள் கைமாறி கட்டக்கடைசியில் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது என்று அப்போது பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

நம்ம இளைய தளபதி நடிச்ச ‘கத்தி’ திரைப்படம் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு இல்ல. அப்படியே அந்த ‘கத்தி’ படத்தின் ரிலீஸில் கதைத் திருட்டு பஞ்சாயத்து வந்தது ஞாபகம் இருக்கா? முதன் முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையைத் திருடிட்டார் என்று வழக்குத் தொடர்ந்த பெருமை ‘அறம்’ படத்தோட இயக்குநர் கோபிக்கு தான் உண்டு. அந்த கதைத் திருட்டு வழக்கில் சில பல லட்சங்கள் கைமாறி கட்டக்கடைசியில் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது என்று அப்போது பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

இதுக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ‘கத்தி’ படம் ரிலீஸாகி, கதை, திரைக்கதைக்காக பரவலாகப் பேசப்பட்டதும் மூல கதைக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்பட்ட கோபியை யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. கதை திருட்டு பஞ்சாயத்து கிளப்பியதால் அதன் பிறகு கோடம்பாக்கமும் அவரைக் கொண்டாடவில்லை. இந்நிலையில், கோபி மீது பரிதாபப்பட்ட நயன்தாரா, தனது உதவியாளர் மூலமாக கோபிக்கு அழைப்பு விடுத்தார்.
பழைய சம்பவங்களை எல்லாம் பேச வேண்டாம். வேறு ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா… அப்படி வெச்சிருந்தா உங்கள் இயக்கத்தில் நான் ஒரு படம் தயாரிக்கிறேன்’ என்று எந்த கதையையும் கேட்காமல், பட்ஜெட் பற்றி எல்லாம் விசாரிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்து தனது சொந்த பணத்தில் தயாரித்த படம் தான் ‘அறம்’. அந்த படத்தில் இமேஜ் காரணமாக கோபி கதைச் சொல்லும் போது நயன்தாரா எல்லாம் கேரக்டரில் கிடையவே கிடையாது. முழு கதையையும் கேட்டு, நானே நடிக்கிறேன் என்று களமிறங்கிய நயன்தாரா, ‘அறம்’ படத்தின் மூலமாக நல்ல நடிகை, மனிதாபிமான பெண்மணி, சொல்லி வைத்து ஹிட்டடித்த லேடி சூப்பர் ஸ்டார், ஷோலோ ஹீரோயினாக நடிச்சாலும் கலெக்‌ஷன்ல ரியல் குயின் தான்’  என்கிற பல பட்ட பெயர்களையும் கோடிகளில் லாபங்களையும் பார்த்தார். ‘அறம்’ படத்தோட கதை, ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து விட்ட குழந்தையை பத்திரமாக மீட்பது தான். 

தமிழகத்தையே உலுக்கியெடுத்த சுஜித் மரணம் பெரிதாக நடிகைகளின் கல் மனசை உலுக்காதது தான் வேதனை. நயன்தாரா சுஜித் பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் தரிசனத்துக்கும், துபாய்க்கு டூயட் பாடவும் நேரம் ஒதுக்கிக் கொண்டிருந்த போது, உருகி உருகி தனது மன வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடவுள் சுஜித்தின் குடும்பத்திற்கு தைரியத்தைத் தரட்டும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அது சரி… யாரையும் வாழ்த்துறதுக்கு தான் மனசு கிடையாது… கஷ்டத்துல ஆறுதல் சொல்லவுமா மனசு இருக்காது?  என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!