நம்ம ஜானுவா இது! இவ்வளவு மாடர்ன் ஆயிட்டாங்க…
கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் செலிபிரிட்டி ஷோ ஸ்டாப்பேர் நம்ம குட்டி ஜானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் செலிபிரிட்டி ஷோ ஸ்டாப்பேர் நம்ம குட்டி ஜானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சி.பிரேம் குமார் இயக்கத்தில் , விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் உருவான காதல் காவிய திரைப்படமாக வெளிவந்த 96 படத்தில் சிறுவயது த்ரிஷாவாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் ஜானு என்கிற கெளரி கிஷன். நடித்த முதல் படமே மெகா ஹிட் ஆனதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் சிறுவயது கதாநாயகியாக நடித்தார்.
A post shared by IFPL (@theifpl) on Jun 17, 2019 at 9:16pm PDT
இந்நிலையில் தற்போது கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் செலிபிரிட்டி ஷோ ஸ்டாப்பேர் (Celebrity Show Stopper) ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த விழாவில் ரேம்ப் வாக்கும் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.