×

நம் நட்பு தொடரட்டும்: சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உலகநாயகன்!

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். சென்னை: இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி
 

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

சென்னை: இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதில், ரஜினிகாந்தின் நண்பரும், சினிமாவில் அவருக்கு சமகால போட்டியாகவும் திகழ்ந்த உலகநாயகன் கமல்ஹாசன் ட்விட்டரில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது ட்வீட்டில், ’என் பல ஆண்டு கால நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நன்றி கமல். என்றென்றும் உங்கள் ரஜினி’ என ட்வீட்டியுள்ளார். 

உலகநாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட ஏராளமானோர் ட்விட்டரில் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.