×

நடிகை ரோஜா பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்!

ஆந்திர அரசியல் களத்தில் குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ள ரோஜா சினிமா மட்டுமல்லாது அரசியலில் சாதித்துள்ளவர். ஆந்திர அரசியல் களத்தில் குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். பிறகு நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற
 

ஆந்திர அரசியல் களத்தில்  குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.

90களில்  முன்னணி நடிகையாக வலம்  வந்தவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ள ரோஜா சினிமா மட்டுமல்லாது  அரசியலில் சாதித்துள்ளவர்.

 ஆந்திர அரசியல் களத்தில்  குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். பிறகு நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.  

மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற ரோஜா  சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தேர்தல் பிரசாரம் செய்தார். குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவரான ரோஜாவுக்கு  அவர்  தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி  கிடைக்கக் கூட வாய்ப்பு இருப்பதாக  அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. இறுதியில் ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனது 47வது  பிறந்த நாளை கொண்டாடும் ரோஜா, நகரி தொகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள்  25 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது