×

நடிகை மும்தாஜ் திடீர் மரணம்? : உண்மையை வெளியிட்ட குடும்பத்தினர்!?

பாலிவுட் முன்னாள் நடிகை மும்தாஜ் குறித்த வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். லண்டன்: பாலிவுட் முன்னாள் நடிகை மும்தாஜ் குறித்த வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். பாலிவுட்டில் 60, 70 காலகட்டங்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மும்தாஜ். இவர் 1958 இந்தியில் சோனெ கி சித்தியா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் வல்லா கியா பாட் ஹை , ஸ்ட்ரீ செஹ்ரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில்
 

பாலிவுட்  முன்னாள் நடிகை மும்தாஜ் குறித்த வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

லண்டன்:  பாலிவுட்  முன்னாள் நடிகை மும்தாஜ் குறித்த வதந்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

பாலிவுட்டில் 60, 70 காலகட்டங்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மும்தாஜ். இவர் 1958 இந்தியில் சோனெ கி சித்தியா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பின் வல்லா கியா பாட் ஹை , ஸ்ட்ரீ  செஹ்ரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர், 1977 ஆம் ஆண்டு ஆய்னா படத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்தார். 

இந்நிலையில் தற்போது 72 வயதாகும் மும்தாஜ் இறந்து விட்டதாகச் செய்திகள்  வெளியாகின. இந்த செய்தி தீயாக பரவ, இயக்குநர் மிலாப் ஜவேரி, ‘மும்தாஜ் நலமாக இருக்கிறார்.   அவருடன் தொலைபேசியில் பேசினேன்’ என்று தெரிவித்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

 

மேலும் மும்தாஜ் உடல்நலம் குறித்து அவரது இளையமகள் தன்யா தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், எனது அம்மா நலமாக உள்ளார். அவர் லண்டனில் இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.