×

நடிகை மீனா மீண்டும் கர்ப்பம்

நடிகை மீனா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: நடிகை மீனா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் மீனா. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். ரஜினிக்கு எப்படி ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ரசிகர்கள் மீனாவுக்கும் இருக்கிறார்கள்.இவர் நடித்த படங்களில் சேரனின் ‘பொற்காலம்‘, ‘பாரதி கண்ணம்மா’ மிக முக்கியமான படங்கள்.
 

நடிகை மீனா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: நடிகை மீனா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் மீனா. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். ரஜினிக்கு எப்படி ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ரசிகர்கள் மீனாவுக்கும் இருக்கிறார்கள்.இவர் நடித்த படங்களில் சேரனின் ‘பொற்காலம்‘, ‘பாரதி கண்ணம்மா’ மிக முக்கியமான படங்கள். 

பல ஆண்டுகள் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் 2009 ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். பெங்களுருவில் கணவருடன் வசித்து வந்தார் மீனா. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடுவராக தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

இந்நிலையில் மீனா முதல் முறையா கர்ப்பம் தரித்து  பெண் குழந்தையைப்  பெற்றெடுத்தார். நைநிகா என்ற அந்தக் குழந்தை மீனாவைப் போலவே  அழகுடன் இருந்தது. குழந்தை வளர்ந்து பேசத்தொடங்கியதும் சினிமாவில் நடிக்க வைக்க திட்டமிட்டார்.  அப்போது  விஜயின் தெறி படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்பட,  அந்த வாய்ப்பை பயன்படுத்தி விஜயுடன் நைநிகாவை நடிக்க வைத்தார் மீனா.  அம்மாவின் வழியில் தமிழ் சினிமாவில் தன் காலடி பதித்தார் குழந்தை நைநிகா. அம்மாவுக்கு கொடுத்த ஆதரவை தமிழ் ரசிகர்கள் அவருக்கும் கொடுத்து பாராட்டினார்கள். 

 

இந்நிலையில் மீனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான சேரனின் ‘திருமணம்‘ படத்தில் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் மீனா. அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஆனால் வெளியில் தெரியாதபடி உடையை அணிந்து மெதுவாக நடந்து வந்தார். நைநிகா மூலம் தமிழ் சினிமாவுக்கு  எதிர்கால கதநாயகியைக் கொடுத்த மீனா, மீண்டும் நலமுடன் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரு கதாநாயகனையும் கொடுக்க வேண்டும். இதுதான் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.