×

நடிகை திவ்யா குறித்த அவதூறு செய்தி: பிரபல செய்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகை திவ்யா ஸ்பந்தனா குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பிய பிரபல செய்தி நிறுவனம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பெங்களூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூரு: நடிகை திவ்யா ஸ்பந்தனா குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பிய பிரபல செய்தி நிறுவனம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்டத்தில் நடிகையும்
 

நடிகை திவ்யா ஸ்பந்தனா குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பிய  பிரபல செய்தி நிறுவனம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பெங்களூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பெங்களூரு: நடிகை திவ்யா ஸ்பந்தனா குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பிய  பிரபல செய்தி நிறுவனம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பெங்களூரு  மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற  ஐ.பி.எல் சூதாட்டத்தில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான திவ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக ஏசியாநெட் நிறுவனம்  செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்கு  நடிகை திவ்யா  பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அதில், ‘2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்கும் எனக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. நான், கர்நாடகா மாநிலத் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். ஆனால், ஐ.பி.எல் சூதாட்டத்தில் எனக்கு பங்கிருந்ததாக ஒளிபரப்பட்டுள்ளது. இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் புகழுக்கு அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். 

ஆனால்  இது குறித்து விளக்கமளித்த ஏசியாநெட் நிறுவனம், அந்த செய்தியில் திவ்யா பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. அதனால் அவருக்கு களங்கம் ஏற்படவில்லை. ஐபிஎல் சூதாட்டம் குறித்து நடத்திய விசாரணையில் கர்நாடக திரைப்பட நடிகர்களுக்குத் தொடர்பு உள்ளது என்ற தகவல் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது’ என்றனர்.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்து  நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘  கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்டத்திற்கும் திவ்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் திவ்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் பெங்களூர் அணியின் தூதுவராக இருந்தார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் அடிப்படை ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டு  சுவர்ணா செய்தி நிறுவனம் பத்திரிகை நெறிமுறைகளை மீறிவிட்டது. இந்த செய்தி மூலம் திவ்யா மீது களங்கம் ஏற்படுவதே நோக்கமாக இருந்துள்ளது. மதிப்புள்ள பொருள்களைவிட ஒருவர் மீதான நன்மதிப்புதான் முக்கியமானது. அதனால் ஏசியாநெட் நிறுவனத்தின்   சுவர்ணா செய்தி நிறுவனம்  திவ்யாவுக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.