×

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? 

நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது சென்னை: நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்.6ம் தேதி தெலுங்கு நடிகரும், தனது காதலருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பின் படு பிசியாக நடித்து வரும் சமந்தா தொடர்ச்சியாக ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.சூப்பர் ஹிட் நடிகையாக மட்டும் இல்லாமல்,சமந்தா
 

நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது

சென்னை: நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்.6ம் தேதி தெலுங்கு நடிகரும், தனது காதலருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பின் படு பிசியாக நடித்து வரும் சமந்தா தொடர்ச்சியாக ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.சூப்பர் ஹிட் நடிகையாக மட்டும் இல்லாமல்,சமந்தா தனது கணவருக்கு சூப்பர் மனைவியாக இருக்கிறார். 

இந்நிலையில் இந்த புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடிய புகைப்படத்தைத் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி எழுப்பி வந்தனர்? ஆனால் அதற்கு சமந்தா பதில்ஏதும்  சொல்லாமல் மவுனமாக இருப்பதால் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி என்று தெலுங்கு பட உலகினர் கூறிவருகின்றனர்.