×

நடிகை குஷ்பூ டிவிட்டரில் கூறிய புகார்: உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை!

நடிகை குஷ்பூ 10 நாட்களுக்கு மேலாக தன்னுடைய வீட்டின் அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அந்த வாகனம் கைப்பற்றப்பட்டது. சென்னை: நடிகை குஷ்பூ 10 நாட்களுக்கு மேலாக தன்னுடைய வீட்டின் அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அந்த வாகனம் கைப்பற்றப்பட்டது. நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் சமூக பிரச்சனைகளிலும்
 

நடிகை குஷ்பூ 10 நாட்களுக்கு மேலாக தன்னுடைய வீட்டின் அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அந்த வாகனம் கைப்பற்றப்பட்டது.  

சென்னை:  நடிகை குஷ்பூ 10 நாட்களுக்கு மேலாக தன்னுடைய வீட்டின் அருகே நின்றிருந்த சரக்கு வாகனம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அந்த வாகனம் கைப்பற்றப்பட்டது.  

நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக  அரசியலிலும்  தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். 

 

இந்நிலையில் போட் கிளப் பகுதியில் உள்ள நடிகை குஷ்பூ வீட்டின் அருகே  கடந்த 10 நாட்களாகப் பதிவெண் இல்லாத   சரக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்துள்ளது. இதை கவனித்த நடிகை குஷ்பூ இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு சென்னை காவல்துறையையும் டேக் செய்திருந்தார். இதையடுத்து சரக்கு வாகனம் போக்குவரத்து காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், தகவலுக்கு நன்றி தெரிவித்த காவல்துறையினர், GCTP என்ற செயலி மூலம் புகாரை தெரிவிக்குமாறு குஷ்புவை கேட்டுக் கொண்டனர். 

 

இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பூ,  GCTP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதாகக்  கூறியதுடன் அவர்களுக்கு நன்றியும்  தெரிவித்தார்.