×

நடிகை காயத்திரிக்கு பிரபல ஒளிப்பதிவாளருக்கு விரைவில் டும் டும் டும்!

நடிகை காயத்திரிக்கும், பிரபல ஒளிப்பதிவாளருக்கு வரும் மே 19ம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை: நடிகை காயத்திரிக்கும், பிரபல ஒளிப்பதிவாளருக்கு வரும் மே 19ம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் ஜோக்கர், சகா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் தற்போது நடிகர் ஜீவா நடித்து வரும் சீறு என்ற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவன்
 

நடிகை காயத்திரிக்கும், பிரபல ஒளிப்பதிவாளருக்கு வரும் மே 19ம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை காயத்திரிக்கும், பிரபல ஒளிப்பதிவாளருக்கு வரும் மே 19ம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழில் ஜோக்கர், சகா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் தற்போது நடிகர் ஜீவா நடித்து வரும் சீறு என்ற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  திருமணம் நிச்சயிக்கப்பட்டதாம். அதன்படி  தற்போது வருகிற மே 19 ஆம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், ‘நானும்,ஜீவன் ராஜும் 16 வருடமாக நண்பர்களாகப் பழகி வந்தோம். பின்னர் எங்களின் பெற்றோர், எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நாங்களும் சம்மதித்தோம். வரும் 19ம் தேதி திருமணம் நடக்கிறது. 22ம் தேதி திருவனந்தபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி சீறு படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் திரைப்படத்தில் நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.