×

நடிகர் விமலுக்கு ரூ. 4 கோடி கடன்…நெருக்கடி கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்!

ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் தயாரித்தது. தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதையடுத்து கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும் ஒருசில படங்களை தவிர விமலின் மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதையடுத்து தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விமலுக்கு ஓரளவு கைகொடுத்த படம் மன்னர் வகையறா. இயக்குநர்
 

ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் தயாரித்தது. 

தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதையடுத்து கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும் ஒருசில படங்களை தவிர விமலின் மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதையடுத்து  தொடர் தோல்விகளால்  துவண்டு போயிருந்த விமலுக்கு ஓரளவு கைகொடுத்த படம் மன்னர் வகையறா.

இயக்குநர்  பூபதி பாண்டியன் இயக்கிய இப்படத்தில்  ‘கயல்’  ஆனந்தி,  பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் தயாரித்தது. 

இந்நிலையில் அரசு பிலிம்ஸ் தயாரிப்பாளர் கோபி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், ‘பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் , சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம். நடிகர் விமல் தயாரித்த மன்னர் வகையறா படத்திற்கு அவர் கேட்டுக் கொண்டதால் ரூபாய் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருந்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ரூபாய் 1 கோடியே 35 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி தொகையை திரைப்படத்தில் நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் மூலம் திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து இருந்தார். அதனை நம்பி நானும் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறேன் ஆனால் மன்னர் வகையறா படத்திற்குப் பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு எந்த பணத்தையும் திருப்பித் தரவில்லை . நீதிமன்ற தீர்ப்பின்படி என்னுடைய என்ஓசி இல்லாமல் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும்,  படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் . உங்கள் நலனுக்காகவே இந்த கடிதத்தை நான் அனுப்புகிறேன். வேறு எந்த உள் நோக்கமும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.