×

நடிகர் விஜய் சேதுபதி, யுகபாரதிக்கு கலைமாமணி விருது!

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள
 

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். 

தமிழக அரசு சார்பில் திரைத்துறை  உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். 

அப்போது 2017 ஆம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை.  விழாவிற்கு விஜய் சேதுபதி தாமதமாக வந்ததால்  தரவில்லை என்று கூறப்பட்டது. விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் யுகபாரதிக்கு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்  பாண்டியராஜன் சென்னை தலைமைச்செயலகத்தில்  இன்று  விருது வழங்கி கௌரவித்தார். அத்துடன் நடிகர் சந்தானத்தின் விருதை அவரது மேலாளரும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருதை அவரது மகள் ஜானகியும் அமைச்சரிடம் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.