×

நடிகர் விஜயின் ‘தளபதி 64’ படத்துக்கு வந்த சிக்கல்!

வடசென்னையில் பகுதிகளில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் நடித்துள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில்
 

வடசென்னையில் பகுதிகளில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் நடித்துள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் பகுதிகளில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் நடித்துள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதையடுத்து இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியின் கற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் படப்பிடிப்பு துவங்கலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக ௯௬ படத்தின் ஸ்டார் நடிகை கௌரி கிருஷ்ணன் தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.